Tuesday, July 3, 2012

ஜுலை 3

ஜுலை 3
324 - ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் ரோமப் பேரரசன் முதலாம் கொன்ஸ்டன்டீன் லிசீனியசை வென்றான்.
987 - ஹியூ காப்பெட் என்பவன் பிரான்சின் மன்னன் ஆனான். இவனது வம்சத்தினர்
1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர்.
1250 - பிரான்சின் ஒன்பதாம் லூயி எகிப்தில் ஏழாவது சிலுவைப் போரில் ஈடுபட்டிருந்தபோது பாய்பர்களால் பிடிபட்டான்.
1608 - கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது.
1754 - ஏழாண்டுப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர்.
1775 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டன் மசாசுசெட்சில் இராணுவத்துக்குத் தலைமை வகித்தார்.
1778 - புருசியா ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது.
1844 - ஐஸ்லாந்தில் கடைசிச் சோடி பெரிய ஓக் பறவைகள் கொல்லப்பட்டன.
1848 - அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.
1866 - புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய-புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.
1872 - யாழ்ப்பாணக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1890 - ஐடஹோ ஐக்கிய அமெரிக்காவின் 43வது மாநிலமாக இணைந்தது.
1944 - இரண்டாம் உலகப் போர்: பெலரஸ்சின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் படையினரால் நாசி ஜேர்மனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1962 - பிரான்சுக்கு எதிரான அல்ஜீரிய விடுதலைப் போர் நிறைவு பெற்றது.
1988 - அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த USS Vincennes எனும் போர்க்கப்பல் பாரசீக வளைகுடா மீது பறந்து சென்ற ஈரானிய பயணிகள் விமானத்தை எதிரி விமானம் என்று கருதித் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது.
1988 - பர்மாவில் இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
2006 - பூமியில் இருந்து 432,308 கிமீ தூரத்தில் 2004 XP14 என்ற சிறுகோள் பறந்தது அவதானிக்கப்பட்டது.

No comments: