Monday, July 16, 2012

சொட்டு நீர் பாசன ஊழல்-வெளிப்படும் பூதம்!


சொட்டு நீர் பாசன ஊழல்-வெளிப்படும் பூதம்!
*************************************
நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளிலும் விவசாயம் செய்யும்படி கொண்டுவரப்பட்ட சொட்டு நீர் பாசன திட்டத்தில் தமிழ்நாடு தோட்ட கலைத்துறை அதிகாரிகள் பெரும் ஊழல் செய்துள்ளது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒரு ஏக்கருக்கே பெரும் தொகை தேவைப்படும் இந்த திட்டத்திற்கு 100% முதல் 75% வரை மானியமாக அளிக்க படுகிறது. இந்த மானிய தொகையில் கைவைத்துள்ளனர் அரசுதுறை ஊழியர்கள். ஏழை விவசாயிகள் பயன்படும் வகையில் நீர் மேலாண்மையில் முன்னோடி திட்டமாக கவனிக்கப்பட்டது இந்த திட்டம். தமிழ்நாடு முழுவதும் நடந்துள்ள இந்த முறைகேடு தற்போது நாமக்கல் மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கான விசாரணை தமிழ்நாடு முழுக்க பரவி இதனால் பயனடைந்த முன்னாள், இந்நாள் வேளாண் மற்றும் இதர துறை - அமைச்சர்கள், செயலர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் முகத்திரையும் கிழிக்கப்பட வேண்டும்.

நாமக்கல்லை சேர்ந்த சமூக ஆர்வலர் திரு மகாலிங்கம் அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக இந்த ஊழல் வெளிவந்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் மூலம் அனைத்து தகவலையும் வெளிகொண்டுவந்துள்ள இவருக்கு தற்போது கொலை மிரட்டல்கள் வர துவங்கியுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து இவருக்கான பாதுகாப்பை தன்னார்வ அமைப்புகளும், சமூக ஆர்வலர்களுமே உறுதி செய்ய முடியும் என்பது கசக்கும் உண்மை. இதே நாமக்கலில் திரு.சகாயம் கலக்டராக இருந்திருந்தால்...??

விசாரணை மற்றும் மகாலிங்கத்தின் பாதுகாப்பு குறித்து யாருக்கு மனு அனுப்புவதானாலும் அதற்கான ஈமெயில் முகவரி தமிழ்நாடு அரசு வெப்சிடில் உள்ளது. நாமக்கல் கலக்டர், எஸ்பி, மாநில ஊழல் தடுப்பு,வேளாண்மை துறை செயலர், அமைச்சர், முதல்வர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும்.

No comments: