Monday, July 16, 2012

பழமொழிகளும்,உண்மையான அர்த்தமும்

பழமொழிகளும்,உண்மையான அர்த்தமும்

நாம் பயன்படுத்தும் பழமொழிகள் பெரும்பாலனவற்றிற்கு உண்மையான அர்த்தம் நமக்கு வாழ்க்கைக்கு உதவக்கூடியதாகவும்,பயனுள்ளதாகவும் இருக்கும்.

சட்டியில் இருந்தால்தான்,ஆப்பையில் வரும்;

அர்த்தமாக நினைப்பது;
நாம சமைக்கும் பாத்திரத்தில் இருந்தால்தான்,அதை அள்ளுவதற்கு பயன்படுத்தும் அகப்பையில் வரும் என்பதாகும்.

உண்மையான அர்த்தம்;
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள்,முகனுக்கு உகந்த திதியான ஷஷ்டி-யில் விரதம் இருந்தால்,கர்ப்பப்பை(அகப்பை) இல் குழந்தை வரும் என்பதே உண்மையான அர்த்தமாகும்.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம்;

அர்த்தமாக நினைப்பது;
எவ்வளவு பொய்யை வேண்டுமானாலும் சொல்லி திருமணத்தை நடத்தலாம்.

உண்மையான அர்த்தம்;
திருமணத்தை நடத்தி வைப்பவர்(இடை தரகர்)ஆயிரம் முரை போய் சொல்லி.எந்த வித சங்கடங்களோ,கௌரவமோ பார்க்கமால் திருமணத்தை நடத்திவைக்கலாம் என்பதே உண்மையான அர்த்தமாகும்.
 
Thanks...பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்

No comments: