Friday, July 20, 2012

தூக்கணாங்குருவியின் காதலுக்கு கட்டுப்பாடு ஏது?

Dr.RAJENDRAN S . DD CBFD

பறவைக் கூடுகளில் பாப்புலர் ரகம், தூக்கணாங்குருவியின் தொங்கு கூடுதான்! ஏராளமான ஆர்க்கிடெக்ட் வித்தைகள் செய்து சிங்கிள் மற்றும் டபுள் பெட்ரூமுடன் கூடுகள் நெய்யப்படுகின்றன. புல், வைக்கோல்,சிறிது களிமண் பொன்றவற்றை கட்டுமான பொருள்களாக வைத்து இமாலயப் பொறுமையுடன் தனது கூட்டை அமைத்துக்கொள்கிறது புளோசெய்டே
( Ploceidae) என்னும் குடும்பத்தைச் சார்ந்த தூக்கணாம்குருவி.

இந்த குடும்பத்தில் உள்ள தூக்கணாங்குருவிகளில் நான்கு வகைகளுக்குதான் இந்தியாவில் சிட்டிசன்ஷிப்! பாயாக் குருவியும் மஞ்சள் குருவியும் கன்னியாகுமரி முதல் கார்கில் வரை சிட்டு மொழி பேசி சிட்டாக பறந்து கொண்டிருக்கின்றன. கருப்புத் தொண்டைக் குருவி என்று மற்றொரு வகை வடகிழக்கு மாநிலங்களில் ஜாகை ! இது மட்டும் அருகில் உள்ள பாகிஸ்தானிலும் கூட அல்கொய்தா பயமில்லாமல் அழகாக வாழ்கின்றன.

தூக்கணாங்குருவிகள் பொதுவாக கூட்டு வாழ்க்கை வாழவே விரும்புகின்றன. செழிப்பான விளைநிலங்கள்தான் இவைகளுக்கு ஃபைவ்ஸ்டார் ஓட்டல்கள்! வடக்கத்திப் பார்ட்டிகள் மட்டும் கொஞ்சம் ரிசர்வ் டைப். இவை தன்னந்தனியே கூட அலைவதுண்டு. அல்கொய்தா சகவாசம்?

காதல் புரிவதில் தூக்கணாங்குருவிகள் செமக் கில்லாடிகள்! அதுவும் ஆண் குருவிகள் மன்மதப் பேர்வழிகள். குறைந்தபட்சம் 3-4 குடும்பங்களை ஒரே நேரத்தில் மெயின்டெயின் பண்ணும். இந்தக் காதல் மனைவிகளும் அப்படியொன்றும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. பெண் குருவிகள் ஒரு விசேஷ சுயம்வரம் நடத்தி, ஆண் குருவிகளின் வாளிப்பான தேகம் பார்த்து, வசதி பார்த்து அப்புறம்தான் கழுத்தை நீட்டுகின்றன.

மழைக்காலம் துவங்கிவிட்டால் இவைகளுக்கு காதல் பீறிட்டு வந்துவிடும்! இந்நேரத்தில் ஆண் குருவிகள் கவர்ச்சியான காம மேக்கப்புக்கு மாறிவிடும். உடலின் மேற்புறத்தில் மஞ்சள் மற்றும் கரும்பழுப்பு வரிப்புள்ளிகளும் மஞ்சள் மார்பும் என மாற்றிக்கொண்டு பளிச்சென்றிருக்கும்.இத்தகைய 40-50 ஆண்குருவிகள் கரையோர மரங்களில் தம் காதல் கோட்டைகளை கட்டத் துவங்கும்.எத்தனை உயரத்தில் கூடுகட்டினாலும் ஒரு ஏர்கூலரின் குளு குளு வசதிக்காக, கூட்டிற்கு நேர் கீழே தண்ணீர் இருக்கும்.

ஒவ்வொரு ஆண் குருவியும் அதன் கற்பனைத் திறனுக்கு ஏற்ப கூட்டின் டிசைனை வடிவமைக்கும். இவை ஒட்டு மொத்தமாய் காதல் கானத்தை கோஷ்டியாக பாடிக் கொண்டு கன்ஸ்ட்ரக்ஷன் பணியில் ஈடுபடும்.

முதலில் ஒரு உறுதியான பிடிப்பை மரக்கிளையில் பின்னிவிட்டு, அதிலிருந்து நீளவாக்கிலும் குறுக்கிலும் பல லூப்புகளை ஸ்வெட்டர் பின்னுவது போல் பின்னி ஸ்கெலிட்டனைத் தயார் பண்ணும். பின் இதன் பக்கவாட்டில் துருத்திக் கொண்டிருக்குமாறு சேம்பர்களை அமைக்கும்.இதில் கீழ்ப்புறத்து பாதுகாப்பான சேம்பர் முட்டை ஸ்பெஷல்! ஒரு கூடு கட்ட 500 தடவை சேகரிப்பிற்காக பறக்கின்றன. மொத்தம் 4000 பதர்களை கொண்டு இவை கூடு கட்டுகின்றன. மொத்தம் கூடு கட்ட 18 நாட்கள் எடுத்து கொள்கின்றன. அவற்றில் குடுவை போல இருக்கும் பகுதிக்கு 8 நாட்கள் வரை எடுத்து கொள்கின்றன ஒரு ஆராய்சியாளர் மெனக்கெட்டு கவுண்டிங் செய்துள்ளார். கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன.
வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன. இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால் வைக்கோலையும், புல்லையும் முடிச்சு (??) போட்டு கட்டப்படும் இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை. (ஆனால் சில சமயம் குரங்குகளுக்கு அட்வைஸ் செய்து கூட்டை இழக்கும்! கதைதான்! இருந்தாலும் குரங்கு பாட்ர்டிகளுக்கு உபதேசம் யாரும் செய்யகூடாதுதானே? )இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை, காற்றினால் கீழே விழுவதில்லை. முக்கியமாக உறுதியான, பாதுகாப்பான கூட்டை உருவாக்கும் பொறுப்பு ஆண் பறவைகளை சார்ந்தது. (இவைகளிலுமா??)

கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருணத்தில் பெண் குருவிக் கூட்டம் திடீரென ஆஜராகிவிடும். இவை ஒவ்வொரு கூடாய் மாறிமாறி விசிட் அடித்து ஆய்வு செய்யும். இப்படி விசிட் வரும் போது அக்கூட்டின் ஆண்குருவி என்னைப்பார்! என் கூட்டைப்பார்!! என்று ஆஜானபாகுவாய் அழகு காட்டும். ஒரு வழியாய் மனங்கவர்ந்த கூட்டில் பெண் குருவி அமர்ந்து கொள்ளும். பெண் குருவி வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு மின்மினி பூச்சியை பிடித்து கூட்டின் உள்ளே களிமண் பேஸ்ட் கொண்டு ஃபிக்ஸ் செய்து முதல் இரவை கொண்டாட தயார் ஆகிவிடுகிறது.

மழைக் குளிரின் கதகதப்பில் சில நாட்களுக்கு புது மனைவியிடன் ஓயாமல் இணை சேரும். குருவி 2-5 முட்டைகளை இட்டு, பெண் குருவி 15 நாள் வரை அடைகாக்கிறது. ஆண் குருவி முதல் பெண் குருவியிடம் விடுதலை பெற்று அடுத்த பெண் குருவிக்கு அடுத்த கூட்டை கட்டி அழகு காட்ட ஆரம்பிக்கிறது. இதே ரீதியில் அதிக பட்சம் ஐந்து குடும்பங்களை ஏற்படுத்திவிடுகிறது. அப்புறம் ஏராள வாரிசுகளுக்கு அப்பாவாகிப் போன சந்தோஷத்திலும்,சீசன் முடிந்து போன ஏக்கத்திலும் வேறு வேலை பார்க்க போய்விடும். மறுபடியும் மழைக்காலம் வராமலா போய்விடும் என்ற ஆறுதலுடன்!

No comments: