Saturday, July 21, 2012

விதை நேர்த்தி :: பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாணக்கொல்லி

பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாணக் கொல்லி விதை நேர்த்தி
விதை நேர்த்தி என்பது பொருள்கள் மற்றும் அதன் செயல்முறைகள் இரண்டையும் குறிக்கும். சில குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விதைகள், நாற்றுக்கள் மற்றும் சில செடிகள் போன்றவற்றின் வளர்ச்சி சூழ்நிலையில் மேம்படுத்தப்படும்.விதை நேர்த்தியானது அடிப்படையான முறையான முலாம் பூசுதல் முதல் உருளைகள் செய்வது வரையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
விதை முலாம்  பூசுதல்
இது அதிகப்படியாக விதை நேர்த்தி செய்யப்படும் முறையாகும். விதைகளை உலர்ந்த (அ) ஈரமானப் பொடிகளை கலவை (அ) திரவங்களில் கலந்து முலாம் பூசுதல் ஆகும். முலாம் பூசுதல் பண்ணையிலோ, ஆலைகளிலோ செய்யலாம். மண்பானை இதற்கு உபயோகப்படுத்தலாம். பூச்சிக்கொல்லிகளை விதையுடன் மண்பானையில் கலக்கலாம் (அ) விதைகளை ஒரு பாலித்தீன் விரிப்பின் மேல் பரவச்செய்து தேவையான பூச்சிக்கொல்லியை அதன் மேல் தூவி கைகளால் கலக்கி விடலாம்.
விதை உறை போல் முலாம் பூசுதல்
மேற்கூறிய முறையிலேயே விதைகளின் மேல் இராசயனம் ஒட்டும் திறன் அதிகரிக்க ஒரு சிறப்பு இணைப்பொருளை உபயோகிப்பது இம்முறையாகும். இதற்கு மேம்படுத்தப்பட்ட நேர்த்தி முறைகள் ஆலைகளில் கையாளப்படவேண்டும்.
விதை உருளைகள்
மிகவும் நவீன விதை நேர்த்தி முறையான இது விதையின் புறத் தோற்றத்தை மாற்றி விதையை உருளைகள் (Pellets) போன்று அமைப்பு பெறுவதற்கு, வசதியாக கையாள்வதற்கும் உதவுகிறது. உருளைகள் ஆக மாற்றுவதற்கு சிறப்பு நவீன சாதனங்கள் தேவைப்படும். மேலும் இம்முறை விதை நேர்த்தியின் செலவு மிக அதிகமாகும்.
பல்வேறு பயிர்களின் விதை நேர்த்தி பரிந்துரைகள்
வ.
எண்
பயிர் பெயர் நோய் / பூச்சி தாக்குதல் விதை நேர்த்தி குறிப்புரை
1. கரும்பு வேர் அழுகல்,
வாடல்
கார்பென்டாசிம்
(0.1 சதவிகிதம்)
ட்ரைக்கோடெர்மா / 4-6 கி / கிலோ விதை 
விதை முலாம் பூசுதல் கருவி மூலம் / மண் பானை / பாலித்தீன் விரிப்புகள் உபயோகிக்கவேண்டும்.
2. நெல் வேர் அழுகல் நோய் ட்ரைக்கோடெர்மா / (5-10 கிராம் / கிலோ விதை) (நாற்றுக்கள் நடும் முன்) விதை முலாம் பூசுதல் கருவி மூலம் / மண் பானை / பாலித்தீன் விரிப்புகள் உபயோகிக்கவேண்டும்.
மற்ற பூச்சிகள் க்ளோரோபைரிபாஸ்/3 கிராம் / கிலோ விதை
ஸ்யூடோமோனாஸ் / 0.5 சதவிகிதம் டபிள்யூ. பி. 10 கி / கிலோ ப்ளூரசென்ஸ்
3. மிளகாய் ஆந்தரக்னோஸ்
வேர் அழுகல்
ட்ரைக்கோடெர்மா
விரிடே 4 கி / கிலோ
விதை நேர்த்தி
கார்பென்டாசிம் @ 1 கிராம் / 100 கிராம் விதை
ப்ளூரசென்ஸ்
4. மண் மூலம் பரவும் பூஞ்சாணம் நோய்கள் ட்ரைக்கோடெர்மா
விரிடே @ 2  கி / கிலோ விதைகள் மற்றும் ஸ்யூடோமோனாஸ் ப்ளூரசென்ஸ் @ 10 கிராம் / கிலோ
காப்டன் 75 கேஎல்எஸ்
1.5-2.5 கிராம் / லிட்டர் நீர்
மண்ணில் ஊற்றி வருதல்
ப்ளூரசென்ஸ்
தத்துப்பூச்சி,
அசுவினி
இலைப்பேன்
இமிடாக்ளோப்ரிட் 70 WS @ 10-15 கி / கிலோ விதை
5. துவரை வாடல் கருகல் மற்றும் வேர் அழுகல் ட்ரைக்கோடெர்மா @ 4  கிராம் / கிலோ விதை ப்ளூரசென்ஸ்
6. பட்டாணி வேர் அழுகல் பேசில்லஸ் சப்டிலிஸ்
ஸ்யூடோமோனாஸ் ப்ளுரெசன்ஸ்
ஆகியவற்றில் விதை நேர்த்தி செய்வது மற்றும் மண் மூலம் இடுதல் @ 100  கிலோ 2.5 - 4 கிலோ
ப்ளூரசென்ஸ்
7. வெண்டை வேர் முடிச்சு
நூற்புழு
பேசிலோமைசஸ் விலாசினஸ்
மற்றும் ஸ்யூடோமோனாஸ் ப்ளூரெசன்ஸ் @ 10 கி / கிலோ என்று விதை மூலம் பூசுதல்
ப்ளூரசென்ஸ்
8. தக்காளி மண் மூலம் பரவும், பூஞ்சான நோய்கள் முன் கருகல் வேர் அழுகல் டி விரிடே @ 2  கிராம் / 100 கிராம் விதை
காப்டன் 75 டபிள்யூ எஸ் 1.5-2 கி / லிட்டர் மண்ணில் ஊற்றவேண்டும்.
ப்ளூரசென்ஸ்
9. கொத்தமல்லி வாடல் ட்ரைக்கோடெர்மா விரிடே / @ 4 கிராம் / கிலோ விதை ப்ளூரசென்ஸ்
10. கத்தரி நுண்ணுயிர் வாடல் ஸ்யூடோமோனாஸ் ப்ளூரசென்ஸ் / @ 10  கிராம் / கிலோ ப்ளூரசென்ஸ்
11. பயிறு வகை காய்கறிகள் விதை மூலம் பரவும் கருவி ட்ரைக்கோடெர்மா விரிடே @ / 2 கிராம் / 100 கிராம் விதை ப்ளூரசென்ஸ்
நூற்புழு கார்போப்யூரான் / கார்போசல்பான் 3 சதவிகிதம் (w/w)
12. சூரியகாந்தி விதை  அழுகல் ட்ரைக்கோடெர்மா விரிடே @ 6  கிராம் / கிலோ விதை
இமிடோக்ளோர்பிரிட் 48 எப்எஸ் @ 5.9 கிராம் / 9.1 கிராம் / கிலோ ws @ 7  கிராம் 9.1 ப்ளூரசென்ஸ்
13. கோதுமை கரையான் விதைக்கும் முன் ஏதேனும் பூச்சிக்கொல்லியுடன் நேர்த்தி செய்யவேண்டும்.
க்ளோரோபைரிபாஸ் @ 4  மில்லி / கிலோ வரை
எண்டோசல்பான் @ 7 மிலி / கிலோ விதை
14. க்ரூசிபெரஸ் காய்கறிகள்
(முட்டைக்கோஸ், காலிபிளவர், பிரகோலி,
நூல்கோல்,
முள்ளங்கி)
மண் / விதை மூலம் பரவும் நோய்கள் (வேர் அழுகல்) டி விரிடே @  கி / 100 கிராம் விதைகள்
காப்டன் 75 சதவிகிதம் WS @ 1.5-2.5 கிராம் / லி மண்ணில் தெளித்தல்
ப்ளூரசென்ஸ்
15. பயிறு வாடல் மற்றும் வேர் அழுகல் டி விரிடே 1 சதவிகிதம் WP @ 9 கிராம் / கிலோ விதைகள்
கார்பென்டாசிம் மற்றும் திரம் @ 0.2 சதவிகிதம் கார்பென்டாசிம் மற்றும் திரம் @ 0.2 சதவிகிதம் விதைகளை க்ளோரோபைரிபாஸ் 20 EC @ 15-30 மில்லி 1 கிலோ / விதை
16. உருளைக்கிழங்கு மண் மற்றும் கிழங்கு மூலம் பரவும் நோய்கள் MEMC 3 சதவிகிதம் WS @ 0.25 சதவிகிதம் (அ) சேமிப்பிற்கு முன் போரிக் அமிலம் 3 சதவிகிதம் 20 நிமிடம் ஊறவைத்தல்.
17. வால் கோதுமை உதிரிபரிப்பூட்டை
சூழ்ந்த கரிப்பூட்டை
இலைக்கீற்று
கரையான்
கார்பாக்ஸின் 75 சதவிகிதம்
திரம் 75 சதவிகிதம் WP @ 1.5-1.87 கிராம் 1 /  கிலோ விதை
கரையான் க்ளோரோபைரிபாஸ் @ 4 மில்லி / கிலோ விதை
18. குடை மிளகாய் ஸ்யூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் மற்றும் லில்லாசிரியஸ்
பேசிலோமைசஸ் லில்லாசிரியஸ் மற்றும் வெர்டிசிலியம் க்ளாமிடோஸ்போரியம் 1 சதவிகிதம் WP @ 10 கிராம் / கிலோ விதை முலாம் பூசுதல்

No comments: