Thursday, July 19, 2012

மழைநீரை செடிகளுக்குப் பயன்படுத்த சில டிப்ஸ்...

மழைநீரை செடிகளுக்குப் பயன்படுத்த சில டிப்ஸ்...

Ways Use Rains Your Garden

தோட்டத்தில் அழகான செடிகளை வைத்து வளர்க்கும் போது செடியானது ஆரோக்கியமாக இருக்க, முதலில் செடிக்கு தேவையான தண்ணீரை ஊற்ற வேண்டும். ஆனால் அதுவே மழைக்காலமாக இருந்தால் நாம் செடியானது அதிகபடியான நீரால் அழுகிவிடும். ஆகவே அப்போது அந்த மழை நீரை சரியான முறையில் செடிக்கு தேவையான அளவு மட்டும் படுமாறு பாய்ச்ச வேண்டும். அவ்வாறு மழை நீரை சரியான முறையில் பயன்படுத்த ஒரு சில ஈஸியான டிப்ஸ் இருக்கிறது.

மேலும் இந்த உலகில் அதிக அளவு உப்புத் தண்ணீரும், மிகவும் குறைந்த அளவு நல்ல தண்ணீரும் இருக்கிறது. அத்தகைய நல்ல தண்ணீரும் மழை வந்தால் மட்டுமே பெற முடியும். அந்த மழையும் ஒரு சில மாதங்களே வரும். ஆகவே அப்போது வரும் போது அந்த மழையை சரியாக முறையாக சேகரித்து, செடிகளுக்கு வேண்டிய நேரம் பயன்படுத்தினால், செடியும் நன்கு வளரும். அதற்கு மழை வரும் போது மாடிகளில் தேங்கும் மழை நீரை ஒரு பைப் மூலம் டேங்க் அமைத்து சேகரித்து வைத்து பயன்படுத்தலாம்.

செடிகளுக்குத் தண்ணீரை ஊற்றாமல், தெளித்து வந்தால் செடிகளின் அனைத்து இடங்களுக்கும் சரியான அளவு தண்ணீரானது பரவும். ஆகவே மழையும் செடிகளுக்கு ஒரு சிறந்த தண்ணீர் தெளிப்பான்.

அதுமட்டுமல்லாமல் மழை வரும்போது தோட்டத்தில் ஒரு சிறிய கூடாரம் போன்று அமைக்க வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமான நீரானது செடிகளுக்கு அழிவைத் தரும். ஆகவே அப்போது மழையின் சாரலானது படும்படி கூடாரம் போன்று அமைக்கலாம். இல்லையென்றால் ஒரு சிறு கால்வாய் அமைத்து அதில் மழை நீரை செடிகளை நோக்கிப் பாய்ச்சலாம். இதனால் செடிகளானது பாதிப்படையாமல் இருக்கும்.

செய்யக்கூடாதவை...

1. வீட்டின் உள்ளே தொட்டிகளில் வளர்க்கும் செடியை முதன்முறையாக மழை வரும் போது வைக்க வேண்டாம். ஏனெனில் அந்த மழையில் டாக்சிக் பொருளானது இருக்கும். மேலும் அந்த மழையானது வளிமண்டலத்தில் உள்ள மாசுக்களை அப்போது தான் வெளியேற்றுகிறது. ஆகவே அந்த மழைநீர் செடிகளில் பட்டால் செடிகள் பாதிக்கப்படும்.

2. மழை நீரானது செடிகளுக்கு நல்லதாக இருக்கலாம், ஆனால் காற்று மற்றும் புயல் நல்லதல்ல. மேலும் மழையானது வரும் போது காற்றானது பலமாக வரலாம். ஆகவே அப்போது செடிகளை காற்று தானே என்று சாதாரணமாக விட்டால், செடியானது வேரோடு பறந்துவிடும்.

No comments: